ADDED : ஆக 29, 2024 10:14 PM
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கும் எனக்கும் உள்ள நட்பு மூன்று தலைமுறை ஆனது. கருணாநிதியை தலைவராக ஏற்றவர் எனது தாத்தா அன்பில் தர்மலிங்கம், ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டவர் எனது தந்தை பொய்யாமொழி.
துணை முதல்வர் நிலையில் இருந்து உதயநிதி அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நட்பு அடுத்த தலைமுறைக்கும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.
பள்ளியில் ஆய்வுக்குச் செல்லும்போது மாணவர்கள் இருக்கையில் அமர காரணம், ஆசிரியர்கள் சுயநலம் இல்லாதவர்கள். அவர்களின் இருக்கையில் அமர ஒரு தகுதி வேண்டும். முதல்வரே பள்ளிகளில் ஆய்வுக்கு செல்லும்போது வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தை கவனித்தார். என்னுடைய ஆசான் அப்படி செய்யும்போது நானும் அதை கடைபிடிக்கிறேன். அரசு நிர்வாகத்தை பொறுத்த வரை முதல்வர் ஸ்டாலின் எங்கள் ஆசிரியராக உள்ளார்.
மகேஷ்,
அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை

