ADDED : பிப் 22, 2025 09:42 PM
சென்னை:வசந்த காலம் மற்றும் கோடைக் காலத்திற்கான துடிப்பான, 'பிரெஷ் பேஷன் பிட்ஸ்' ஆடைகளின் தொகுப்பை, 'அன்லிமிடெட்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலும், நாகரிக தோற்றத்தை உறுதி செய்யும் வகையிலும், டாப்ஸ், டீஸ், சட்டை என, 10,000க்கும் மேற்பட்ட ஆடைகள், இதில் இடம் பெறுகின்றன.
டி- சர்ட்ஸ், எடை குறைவான லினென் சட்டை முதல் ரிசார்ட் காலர் சட்டைகள், ஷார்ட்ஸ், ஸ்டைலான டாப்ஸ், பெண்களுக்கான ஆடைகள் என, பல வகை ஆடைகள் இடம் பெறுகின்றன.
இதுகுறித்து, 'வி - மார்ட் ரீடெயில்' நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி வினித் ஜெயின் கூறியதாவது:
அன்லிமிடெட் பிரெஷ் பேஷன் பிட்ஸ் என்பது, சுய வெளிப்பாடு மற்றும் தனித்துவத்தின் கொண்டாட்டம்.
'ஜென் இசட்' பார்வையாளர்கள் தங்கள் தனித்துவமான பாணியை ஏற்றுக் கொள்வதற்கும், அவர்கள் அணியும் ஒவ்வொரு ஆடையிலும் நம்பிக்கை ஊட்டுவதற்கும், அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம்.
புதிய ஆடை தொகுப்புகள், ஒவ்வொரு தரப்பினரின் துடிப்பான உணர்வோடு எதிரொலிப்பதை உறுதி செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

