கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு பஞ்., தலைவர் பேச்சுக்கு எதிர்ப்பு
கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு பஞ்., தலைவர் பேச்சுக்கு எதிர்ப்பு
ADDED : ஜூலை 01, 2024 03:06 AM
துாத்துக்குடி: துாத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து சார்பில் கிராம சபை கூட்டம், தலைவர் சரவணகுமார் தலைமையில் நேற்று நடந்தது.
கிராம மக்களுக்கு பதிலாக பஞ்., சுகாதார பணியாளர்களை வைத்து கூட்டம் நடத்தப்படுவதாக சிலர் புகார் எழுப்பினர்.
மேலும், பஞ்., பகுதியில், 8,000 பேருக்கு இதுவரை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிலர் பேசினர். தொடர்ந்து, சரவணகுமார் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில், பேசிய வழக்கறிஞர் மாடசாமி, மக்களுக்கு பட்டா வழங்காமல் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டித் தருவதாக கூறுவது தவறு என கேள்வி எழுப்பினார்.
இதனால், அவருக்கும், சரவணகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சரவணகுமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து மக்கள் பலர் வெளியேறினர்.