ADDED : மார் 15, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, பொது சுகாதாரம், இணைப்பு சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு, 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மாநகராட்சி பகுதிகளில் உருவாகும் கழிவுநீர், ஆற்றில் நேரடியாக கலப்பதை தடுக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நடைபாதைகள், தெரு விளக்குகள், நவீன ஓய்வறைகள், குழந்தைகள் விளையாட்டு பூங்கா உள்ளிட்டவை, திருச்சி, மதுரை, ஈரோடு, கோவை, திருநெல்வேலி மாநகராட்சிகளில், 400 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்