ADDED : ஜூன் 06, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தென்காசி மாவட்டம், குருவிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரத்னகுமார், 40. இவர், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், குற்றப்பிரிவில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றினார்.
இவருக்கும், இவரதுமனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த 2021ம் ஆண்டு, அவரது மனைவி குருவிகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, ரத்னகுமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில், ரத்னகுமார் முன்ஜாமின் பெற்றார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று, முடியும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோட், முதல் நிலை போலீஸ்காரர் ரத்னகுமாரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.