ADDED : பிப் 27, 2025 11:40 PM
சென்னை:திருவெண்காடு சுப்ரமண்ய கனபாடிகள் வேதபாராயண அறக்கட்டளை வாயிலாக, 10 நாட்கள் நடைபெற்ற சதுர்வேத பாராயணம் நிறைவு பெற்றது.
இந்த மாதம், 9 முதல் 19 ம் தேதி வரை திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ அகோரமூர்த்தி சன்னிதியிலும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்திலும், நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அனைத்து பாராயணங்களிலும், தலை சிறந்த 80 வேதவித்வான்களும் மற்றும் சிவச்சாரியார்கள் 20 பேரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
யஜுர் வேத பரிட்சை, 17ம் தேதி, வடகுடி சங்கர தீட்சிதர் மற்றும் செதலபதி சுப்ரமண்ய கனபாடிகள் தலைமையில் நடைபெற்றது.
நுாற்றுக்கணக்கான வித்வான்கள், வேதம் படிக்கும் வித்யார்த்திகள் பங்கேற்று, 9 வித்வான்களை கவுரவித்தனர்.
பூர்த்தி தினம், தம்பதி பூஜையும், வேத வித்வான்கள் கவுரவிப்பும் நடந்தன. சபாவின் மேனேஜிங் டிரஸ்டி சந்திரன், அனைவரையும் கவுரவித்தார்.
அடுத்த, 88 ம் ஆண்டு வேத பாராயணம், 28.02.2026 முதல் 10.03.2026 வரை, அயோத்தியில் நடைபெறும் என, சந்திரன் அறிவித்துள்ளார்.

