ADDED : ஜூலை 31, 2024 12:46 AM
சென்னை:நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழையும், திருப்பூர், தென்காசி உட்பட ஆறு மாவட்டங்களில், இன்று கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் அறிவிப்பு:
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். இதன் காரணமாக, இரு மாவட்டங்களுக்கும், 'ஆரஞ்சு அலெர்ட்' விடப்பட்டுள்ளது.
திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்.
சென்னையில் வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, வால்பாறையில், 31 செ.மீ., மழையும், சின்னக்கல்லார், 24; சின்கோனா, விண்ட் வொர்த் எஸ்டேட், 23; பந்தலுார், தேவாலா, 20; சோலையார், 19 செ.மீ., மழையும் பெய்துள்ளது.
அவலாஞ்சி, மேல்கூடலுார், 17; மேல்பவானி, 10; சிறுவாணி, 9; பொள்ளாச்சி, பெரியாறு, 8; ஆழியார், 6; மாஞ்சோலை, 5; செங்கோட்டை, பேச்சிப்பாறை, 4; குழித்துறை, போடி, 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

