ADDED : ஜூன் 28, 2024 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்/ பி.டெக்., ஆகிய இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிந்தது.
இதில், கால்நடை மருத்துவ படிப்பிற்கு, 14,497 பேர், பி.டெக்., படிப்புக்கு, 3,000 பேர் என, 17,497 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவற்றில், மொத்தம் 800 இடங்கள் தான் உள்ளன.
அயல்நாடு வாழ் இந்தியர், அவர்களின் வாரிசுகள், நிதி ஆதரவு பெறுவோர் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு, https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

