ADDED : ஜூலை 16, 2024 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த, 229 பேருக்கு வயிற்று வலி, கண்பார்வை குறைவு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன.
உடன், அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், நேற்று முன்தினம் நிலவரப்படி, 66 பேர் இறந்த நிலையில், 161 பேர் குணமடைந்தனர். இரண்டு பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில், கருணாபுரத்தை சேர்ந்த கண்ணன், 72, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது.

