ADDED : ஆக 20, 2024 09:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சமூக நீதிக்கு வெற்றி. நம், 'இண்டி' கூட்டணியின் கடும் எதிர்ப்பிற்கு பின், இடைநுழைவு ஆட்சேர்ப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. மத்திய அரசு பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயற்சி செய்யும் என்பதால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீட்டுக்கு தன்னிச்சையாக விதிக்கப்பட்டுள்ள, 50 சதவீதம் உச்சவரம்பு உடைக்கப்பட வேண்டும். மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

