கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்
கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்
ADDED : ஆக 23, 2024 02:19 AM

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அதன் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று அறிமுகம் செய்தார்; கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை இந்தாண்டு பிப்ரவரியில் துவக்கினார். கட்சியின் கொடி, கொள்கை விளக்க பாடல் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கொடியை அறிமுகம் செய்த விஜய், 45 அடி உயர கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, 'தமிழன் கொடி பறக்குது; தலைவன் யுகம் பிறக்குது' என்ற கொள்கை விளக்க பாடலையும் வெளியிட்டார்.
கொடியின் மேலேயும், கீழேயும் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறம் இடம் பெற்றுள்ளன. மஞ்சளின் நடுவே வாகை பூவும், அதை சுற்றி 23 சிறிய நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. வாகை பூவின் வலது மற்றும் இடது பக்கத்தில், பிளிரும் போர் யானைகள் உள்ளன.
கொடியை அறிமுகம் செய்த விஜய், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில், 'என்றும் மக்கள் சேவகனாக இருப்பேன்' என, உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
விழாவில் விஜய் பேசியதாவது:
கட்சியின் முதல் மாநாட்டு தேதியை விரைவில் அறிவிப்பேன். மாநாட்டில் கட்சிக் கொடிக்கான விளக்கத்தையும், கட்சியின் கொள்கை குறித்தும் அறிவிப்பேன். கொடிக்கு பின்னால், ஒரு வரலாற்று
தொடர்ச்சி 5ம் பக்கம்

