விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை; ஆளும்கட்சிதான் ஜெயிக்குமா ?
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை; ஆளும்கட்சிதான் ஜெயிக்குமா ?
UPDATED : ஜூலை 13, 2024 10:55 AM
ADDED : ஜூலை 13, 2024 08:05 AM
முழு விபரம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (ஜூலை 13) காலை 8 மணிக்கு துவங்கியது. இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் ஜெயிக்கும் என்பது இந்த தேர்தலில் நிரூபணமாகும் என நம்பப்படுகிறது. முதலில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுக்களில் தி.மு.க., முன்னிலை வகிக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ம் தேதி நடந்தது. தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க., வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட, 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்தது.
ஜூலை 10ம் தேதி, காலை ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து, மாலையில் முடியும் வரை 'மளமள'வென ஓட்டுகள் பதிவாகின. மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் ஓட்டளித்தனர். 82.48 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று(ஜூலை 13) காலை 8 மணிக்கு துவங்கியது.

