ADDED : மார் 22, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., பா.ஜ., ஆகியவை போட்டியிடஉள்ளன.
அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க., சார்பில் அதன் நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், பா.ஜ., கூட்டணியில் அக்கட்சியில் இணைந்த நடிகர் சரத்குமார் மனைவி நடிகை ராதிகா போட்டியிட வாய்ப்புள்ளது.
தி.மு.க., கூட்டணியில் சிட்டிங் எம்.பி.,யான காங்., மாணிக்கம் தாகூரே போட்டியிடுவார் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். எனவே முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதால் விருதுநகர் ஸ்டார் தொகுதியாகும் என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

