ADDED : ஏப் 06, 2024 11:28 PM
தஞ்சாவூர் திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வந்து இந்த டெல்டாவை அழிக்க பார்த்தனர். அதிலிருந்து நாம் தான் காப்பாற்றினோம். முப்போகம் விளையக்கூடிய இந்த பூமியை தி.மு.க.,வினர் அழிக்க பார்த்தனர்.
அதிலிருந்து காப்பாற்றினோம். விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து, அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பல திட்டங்களை கொண்டு வந்ததை தடுத்து பாதுகாத்தோம். இப்படிப்பட்ட தி.மு.க.வுக்கு தேர்தலில் மரண அடி கொடுக்க வேண்டும்.
இந்த பசுமையான பூமியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் பேசி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதை சட்ட பூர்வமாக்கினோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பழனிசாமி பேசிய போது, மீத்தேன் திட்டத்திற்கு ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது ஒப்பந்தம் போட்ட போட்டோவை காட்டினார்.

