ADDED : ஏப் 06, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால நிலையான, நேர்மையான, வெளிப்படையான, உறுதியான, ஊழலற்ற நல்லாட்சியால், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக, இந்தியா உருவெடுத்துள்ளது. விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்.
விவசாய கடன் அட்டை, வீடுகள் தோறும் சமையல் எரிவாயு இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, கழிப்பறை, பிரதமர் வீட்டுவசதி திட்டம், தெருவோர வியாபாரிகளுக்கு கடன் என பல்வேறு திட்டங்களால், ஒவ்வொரு இந்தியரும் பயனடைந்துள்ளனர். இந்த வளர்ச்சி தொடர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். அதற்கு, பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.
- அர்ஜுன் சம்பத்,
ஹிந்து மக்கள் கட்சி தலைவர்.

