ADDED : ஆக 10, 2024 01:34 AM
சென்னை:மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடக்கும். இந்த ஆண்டும் பணியை இரண்டு கட்டமாக துவக்க வேண்டும். முதலில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்காக, வரும் 20ம் தேதி முதல் அக்., 10ம் தேதி வரை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் விபரங்களை சரிபார்க்க வேண்டும்.
அடுத்து அக்., 19 முதல் 28 வரை, வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும். அக்., 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும். அன்று முதல் நவ., 28 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறலாம். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.
அடுத்த ஆண்டு ஜன., 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும். சிறப்பு முகாம்கள் தேதியை, தலைமை தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

