sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வடசென்னை - 3 நிலையத்தில் வணிக மின் உற்பத்தி எப்போது?

/

வடசென்னை - 3 நிலையத்தில் வணிக மின் உற்பத்தி எப்போது?

வடசென்னை - 3 நிலையத்தில் வணிக மின் உற்பத்தி எப்போது?

வடசென்னை - 3 நிலையத்தில் வணிக மின் உற்பத்தி எப்போது?


ADDED : ஆக 24, 2024 08:56 PM

Google News

ADDED : ஆக 24, 2024 08:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திருவள்ளூரில் உள்ள வடசென்னை - 3 அனல் மின் நிலையத்தில், சோதனை உற்பத்தி துவங்கி ஐந்து மாதங்களாகியும், வணிக மின் உற்பத்தி துவங்கப்படவில்லை.

அந்த பணியை விரைவாக துவக்குமாறு, பி.எச்.இ.எல்., நிறுவனத்தை மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், 800 மெகாவாட் திறனில் வடசென்னை - 3 அனல் மின் நிலையம் அமைத்துள்ளது. கடந்த, 2016ல் துவங்கிய கட்டுமான பணியின் திட்டச்செலவு, 10,158 கோடி ரூபாய்.

நிலக்கரி


மின் நிலையத்தில், 'பாய்லர், டர்பைன், ஜெனரேட்டர்' நிறுவுதல் உள்ளிட்ட முக்கிய பணிகளை, பி.எச்.இ.எல்., நிறுவனமும்; நிலக்கரி, சாம்பல் கட்டமைப்பு பணிகளை, தனியார் நிறுவனமும் மேற்கொண்டன. 2020 - 21ல் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், நீண்ட இழுபறிக்கு பின் இந்தாண்டு மார்ச் 7ல் தான் சோதனை மின் உற்பத்தி துவங்கியது.

தினமும் சராசரியாக, 250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், ஜூன் 27ல் முழு திறனான 800 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டது. பின், அது குறைக்கப்பட்டு தினமும், 500 - 600 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு மின் நிலையத்தில் சோதனை உற்பத்தி துவக்கிய பின் தொடர்ந்து, 72 மணி நேரம் முழுதிறனில் உற்பத்தி செய்ய வேண்டும். அதை தொடர்ந்து தான், மின் நிலையம் வணிக ரீதியாக செயல்பட துவங்கியதாக அறிவிக்கப்படும்.

வலியுறுத்தல்


ஆனால், வட சென்னை - 3 மின் நிலையத்தில் சோதனை உற்பத்தி துவங்கி ஐந்து மாதங்களாகியும் வணிக உற்பத்தி துவங்கப்படவில்லை.

இந்நிலையில், வணிக மின் உற்பத்தியை விரைவாக துவக்கி, மின் நிலைய செயல்பாட்டை ஒப்படைக்குமாறு, பி.எச்.இ.எல்., நிறுவன அதிகாரிகளை, மின் வாரிய அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஒவ்வொன்றிலும் சோதனை


இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் வாரியத்திற்கு சொந்தமான ஆறு அனல் மின் நிலையங்களில், வடசென்னை - 3 தான் அதிக திறன் உடையது. மிகப்பெரிய கட்டமைப்பை உடைய அந்த மின் நிலையத்தில், ஒவ்வொரு சாதனங்களையும் பரிசோதிக்க வேண்டியுள்ளது. இதனால், மின் உற்பத்தி துவங்கிய நிலையில், சிறு சிறு தவறுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அவை, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு சரிசெய்யப் படுகின்றன. தற்போது, அனைத்து சோதனைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த மாதத்திற்குள் வணிக உற்பத்தியை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us