'தி.மு.க., மாநாட்டுக்கும் இப்படி கேள்விகள் கேட்கப்பட்டதா?'
'தி.மு.க., மாநாட்டுக்கும் இப்படி கேள்விகள் கேட்கப்பட்டதா?'
ADDED : செப் 04, 2024 08:39 PM
சென்னை:''நடிகர் விஜய் மாநாட்டிற்கு 21 கேள்விகளை போலீசார் எழுப்பியுள்ளனர். இதேபோல தி.மு.க., நடத்திய மாநாடுகளுக்கும் கேள்வி கேட்கப்பட்டதா'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
விஜய் மாநாடு நடத்த அனுமதி தருவதற்கு, 21 கேள்விகளை, போலீசார் கேட்டுள்ளனர். தி.மு.க., மாநாடுகள் நடத்தும்போது, இப்படித்தான் கேள்விகள் கேட்கப்பட்டனவா?
பெண்கள், குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது; எவ்வளவு பேர் வருவர் என்றும் கேட்டுள்ளனர். இது தேவையற்றது. உரிய ஏற்பாடுகள் இல்லாமல், மாநாட்டை யாரும் நடத்த மாட்டார்கள்.
மாநாட்டை, வரும் 23ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலம் தாழ்த்த வேண்டும் என்பதற்காக, போலீசார் இவ்வாறு செய்கின்றனர். மாநாட்டில் கட்சி கொள்கை, கோட்பாடுகளை அறிவித்து தலைவர் உரையாற்றுவது தான் சிறப்பாக இருக்கும்.
எனவே, மாநாட்டில் மற்ற கட்சி தலைவர்கள் பங்கேற்பது, அவ்வளவு நன்றாக இருக்காது. எனவே, மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.