வயநாடு நிவாரணம் அ.தி.மு.க., சார்பில் ரூ.1 கோடி அளிப்பு
வயநாடு நிவாரணம் அ.தி.மு.க., சார்பில் ரூ.1 கோடி அளிப்பு
ADDED : ஆக 07, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேவையான உதவிகளை செய்வதற்காக, அ.தி.மு.க., சார்பில், 1 கோடி ரூபாய்க்கான வரைவோலையை, கேரள முதல்வரிடம், முன்னாள் அமைச்சர் வேலுமணி வழங்கினார்.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அ.தி.மு.க., சார்பில், 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என, அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி நேற்று, அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ., பொன் ஜெயலசீலன் மற்றும் நிர்வாகிகள், கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள மின்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோரை சந்தித்து, 1 கோடி ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினர்.