ADDED : ஏப் 09, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு தொகுதி த.மா.கா., வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து, அக்கட்சி தலைவர் வாசன் பேசியதாவது:
மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும். அதன் அடிப்படையில், 'வளமான தமிழகம்; வலிமையான பாரதம்' என்ற நோக்கில் இக்கூட்டணி தேர்தலை சந்திக்கிறது.
மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்பது, இந்த நாட்டுக்கு நல்லதை செய்வதற்காகவும், இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதற்காகவும் தான் என்பதை உணர வேண்டும்.
இந்தியாவின் பொருளாதாரம் மேலும், மேலும் உயர வேண்டும்.
நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே தலைமையாக மோடி தலைமையிலானதாகும் என்பதை மனதில் வைத்து ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

