ADDED : ஜூன் 02, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : ஏழு கட்டமாக நடந்த லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதனையொட்டி வேட்பாளர்கள், முகவர்கள் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அலைபேசி, தீப்பெட்டி, கூர்மையான ஆயுதங்கள், மை பேனா, உணவு பொட்டலங்கள், மது அருந்தி வருவதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
இதனை தடுக்கும் வகையில் போலீசார் சோதனைகளுக்கு பின் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.