ADDED : செப் 08, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாடு தேதியை, அக்கட்சியின் தலைவர் விஜய், இன்று அறிவிக்க உள்ளார்.
கடந்த மாதம் 22ம் தேதி கட்சிக் கொடி மற்றும் கொடி பாடலை, அவர் அறிமுகப்படுத்தினார்.
முதல் மாநாட்டை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார். மாநாடு தேதியை, விஜய் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், த.வெ.க.,வை பதிவு பெற்ற கட்சியாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது தொடர்பான தகவலையும், அவர் இன்று வெளியிட உள்ளார்.