ADDED : ஜூன் 15, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று பகல் 12:30 மணிக்கு பெங்களூரிலிருந்து தனி விமானத்தில், சென்னை வந்தார். விமான நிலையத்தில், அவருக்கு காங்கிரசார் வரவேற்பு அளித்தனர்.
பின், செய்தியாளர்களிடம் கார்கே கூறுகையில், ''சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள என் உறவினரை பார்த்து, உடல் நலம் விசாரிக்க வந்துள்ளேன். எந்த அரசியல் நோக்கமும் இல்லை. இது முழுக்க தனிப்பட்ட பயணம். அரசியல் குறித்து பேச விரும்பவில்லை,'' என்றார்.
அதே விமானத்தில், மாலை 4:30 மணிக்கு பெங்களூரு திரும்பினார்.

