ADDED : ஜூலை 02, 2024 05:52 AM

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும்படி, கூட்டணி கட்சியான பா.ம.க., தான் பா.ஜ.,விடம் வலியுறுத்த வேண்டும்' என, சட்ட அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார்.ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசை பா.ம.க., தான் வலியுறுத்த வேண்டும் என்றால், தி.மு.க., எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும்? லோக்சபாவில் தி.மு.க, கூட்டணிக்கு 39 எம்.பி.,க்கள் எதற்கு; அதிகாரத்தை அனுபவிக்க மட்டும் தான் தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டளித்தனரா?
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ள நிலையில், அந்த கடமையை செய்ய திறனற்ற தி.மு.க., அரசு, மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்று போகாத ஊருக்கு வழிகாட்டக் கூடாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம்; சமூக நீதி வழங்க மாட்டோம் என்பது தான் தமிழக அரசின் கொள்கை என்றால், அதை வெளிப்படையாக அறிவித்து விடலாம்.
- ராமதாஸ்
நிறுவனர், பா.ம.க.,