ADDED : ஜூலை 01, 2024 03:04 AM
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டை சேர்ந்தவர் பிரவீன்குமார், 30; சென்னையில் பேக்கரி மாஸ்டராக வேலை செய்கிறார். இவரது மனைவி நந்தினி, 28. திருமணமாகி மூன்றாண்டாகியும் குழந்தை இல்லாத நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன் கணவனை பிரிந்து, வெங்டேஸ்வரா நகரிலுள்ள தாய் வீட்டுக்கு நந்தினி சென்று விட்டார். குடும்பம் நடத்த பிரவீன்குமார் அழைத்தும் அவர் மறுத்து வந்தார்.
திருப்பத்துாரில் ஒரு கடையில் பணியாற்றிய நந்தினி, நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றார். அப்போது வழிமறித்த பிரவீன்குமார், கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார்.
உடலில் 12 இடங்களில் கத்திக்குத்து விழுந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த நந்தினியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருப்பத்துார் டவுன் போலீசார், பிரவீன்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.