பரவியது வனத்தீ: கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்கள்
பரவியது வனத்தீ: கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்கள்
ADDED : மார் 29, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதியில் வறட்சியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மசினகுடி கோட்டம், சிங்கார ஆச்சக்கரை அருகே மூங்கில் காட்டில் நேற்று, மாலை, 6:00 மணிக்கு திடீர் வனத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ விரைவாக பரவியது.தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
இரவு, 8:15 மணி வரை தீப்பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. பல ஏக்கர் பரப்பில் மூங்கில் காடு சேதமானது.

