அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார்களா?
அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார்களா?
UPDATED : ஜூன் 04, 2024 02:02 PM
ADDED : ஜூன் 04, 2024 12:04 PM

சென்னை: தமிழகத்தில் பா.ஜ., சார்பில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்திரராஜன், முருகானந்தம், ஏசி சண்முகம் ஆகியோர் பின்னடைவை சந்தித்து உள்ளனர். கோவை தொகுதியில் ஐந்தாவது சுற்று முடிவில் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
தமிழகத்தில் இந்த முறை காலூன்றி விட வேண்டும் என பா.ஜ., முனைப்பு காட்டியது. இதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். வேலூர், நெல்லை, கோவையில் நடந்த பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். கோவையில் களமிறங்கிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நெல்லையில் களமிறங்கிய நயினார் நாகேந்திரன், திருப்பூரில் முருகானந்தம், தென் சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன், வேலூரில் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் இவர்கள் அனைவரும் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.
கோவையில்,
5வது சுற்று முடிவில்
தி.மு.க., ராஜ்குமார் - 1,27,784
பா.ஜ., அண்ணாமலை -1,02,784
அ.தி.மு.க., ராமச்சந்திரன் -53, 811
4வது சுற்று முடிவில்
தி.மு.க., ராஜ்குமார் -103484
பா.ஜ., அண்ணாமலை-81095
அ.தி.மு.க. ராமச்சந்திரன்-42, 791
3வது சுற்று முடிவில்
தி.மு.க., ராஜ்குமார்- 80,040
பா.ஜ.. அண்ணாமலை-61035
அ.தி.மு.க., ராமச்சந்திரன் -33883
2வது சுற்று முடிவில்
தி.மு.க.,வின் கணபதி ராஜ்குமார் - 53580பா.ஜ.,வின் அண்ணாமலை 41167அ.தி.மு.க.,வின் ராமச்சந்திரன் 23396 பெற்றுள்ளனர். கணபதி ராஜ்குமார் 12,413 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நெல்லையில்,
நான்காவது சுற்று முடிவின்படி
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 91,708பா.ஜ.,வின் நயினார் நாகேந்திரன் -63,706 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
தென் சென்னை
திமுக.,வின் தமிழச்சி தங்கப்பாண்டியன் -34,065 பா.ஜ.,வின் தமிழிசை சவுந்திரராஜன் 18,806 ஓட்டுகள் பெற்றுள்ளனர்.
திருப்பூரில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் 69,559 ஓட்டுகளும்பா.ஜ.,வின் ஏ.பி.முருகானந்தம் -24,305 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
வேலூரில்
தி.மு.க.,வின் கதிர் ஆனந்த் 88,126பா.ஜ.,கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம் 59,889 ஓட்டுகள் பெற்றுள்ளனர்.