ADDED : மே 17, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோவை, ஈரோடு மாவட்டங்களில் காற்றாலை மின் நிலையங்கள் அதிகளவில் உள்ளன. காற்றாலைகள் மூலம் அதிகபட்சம், 9,020 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். காற்றின் வேகத்தை பொறுத்து மின் உற்பத்தியில் மாற்றம் ஏற்படும்.
கடந்த, 4ல் காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் காற்றாலைகளில், 2,359 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலைகள் உள்ள மாவட்டங்களில், காற்றின் வேகம் குறைந்து கோடை மழை பெய்வதால் காற்றாலை மின் உற்பத்தி சரியத்தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் மதியம், 601 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, நேற்று காலை, 'பூஜ்யம்' ஆனது.
- நமது நிருபர் -

