கடித்த விஷபாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண் : டாக்டர்கள் அதிர்ச்சி
கடித்த விஷபாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண் : டாக்டர்கள் அதிர்ச்சி
ADDED : ஜூன் 30, 2024 08:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி : நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பரவக்காடு பகுதியை சேர்ந்த, பெண் கூலித்தொழிலாளி மல்லிகா.
இவர், தேயிலை பறித்துக் கொண்டிருந்த போது, பிட் வைப்பர் பாம்பு கடித்துள்ளது. அலறிய தொழிலாளியை அருகில் இருந்தவர்கள், கோத்தகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு வரும் போது, கடித்த பாம்பையும், பையில் போட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் வளத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற வனத்துறையினர், பையில் இருந்த பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். இதனால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

