ADDED : ஆக 17, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ் மொழியின் வேர்ச்சொல் ஆராய்ச்சி வித்தகர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு உருவச்சிலையுடன் மணிமண்டபம், மதுரையில் 2007 அக்.,30 அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. அவரது வாரிசுதாரரான பரிபூரணம் அந்த மணிமண்டபத்தில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
அவர் மறைவை தொடர்ந்து அவரது மகளும் தேவநேய பாவாணரின் கொள்ளு பேத்தியுமான மனோசாந்திக்கு கருணை அடிப்படையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணி வழங்கபட்டுள்ளது. நியமன ஆணையை செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் சென்னையில் வழங்கினார்.

