sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கட்சிகளை கடந்து வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்: நாணய வெளியீட்டு விழாவில் ராஜநாத்சிங் பேச்சு

/

கட்சிகளை கடந்து வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்: நாணய வெளியீட்டு விழாவில் ராஜநாத்சிங் பேச்சு

கட்சிகளை கடந்து வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்: நாணய வெளியீட்டு விழாவில் ராஜநாத்சிங் பேச்சு

கட்சிகளை கடந்து வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்: நாணய வெளியீட்டு விழாவில் ராஜநாத்சிங் பேச்சு

18


UPDATED : ஆக 18, 2024 08:59 PM

ADDED : ஆக 18, 2024 08:03 PM

Google News

UPDATED : ஆக 18, 2024 08:59 PM ADDED : ஆக 18, 2024 08:03 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : கட்சிகளை கடந்து வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும் என கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளி்யீட்டு விழா நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.

தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய , மாநில அமைச்சர்கள், தமிழக பா.ஜ, தலைவர் அண்ணாமலை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் வணக்கம் என தமிழில் கூறி உரையை துவக்கிய ராஜ்நாத்சிங் கருணாநிதிக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக கருணாநிதி விளங்கினார். மாநிலங்களின் உரிமைக்காக அவர் போராடினார். இந்தியாவின் தேசிய ஆளுமை மாநிலங்களின் எல்லைகளை கடந்து நாட்டின் தலைவராக திகழ்ந்த கருணாநிதி வேற்றுமையில் ஒற்றுமையை பாராட்டியவர். நாட்டின் கலாசாரம் மற்றும சமூக நீதியின் அடையாளமாக திகழ்கிறார். பஞ்சாப் முதல் தமிழ்நாடு வரை நாட்டில் அரசில் மாற்றங்கள் நிகழ்ந்த போது தலைவராக உருவெடுத்தார். 1960 முதல் இப்போது வரை வலுவான மாநில கட்சியாக திமுக இருப்பதற்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி. தேசிய அளவில் கூட்டணி ஆட்சியை திறம்பட செயல்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. நாட்டின் கூட்டாச்சியை பலப்படுத்தும் தலைவராக திகழ்ந்தார்.

பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவை பேணி வந்தவர் கருணாநிதி, மகளிர் சுய உதவிக்குழுவை துவங்கிய பெருமைக்குரியவர் கருணாநிதி. மகளிர் மேம்பாடு, விளிம்பு நிலை மக்கள் தரமான கல்வியை பெற திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. மக்களின் குறைகளை கேட்க மனுநீதி என்ற நல திட்டத்தை கொண்டு வந்தவர்.

கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை, துணிச்சல் மிக்கவை, தமிழ் இலக்கியம் சினிமா துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் தமிழகத்திற்காக பாடுபட்டவர் கருணாநிதி , கருணாநிதியின் பொது நல தொண்டால் அரசியல் கட்சிகள், கொள்கைகளை கடந்து நாட்டின் வளர்ச்சிக்காக நமதுதிட்டங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிடப்பட்டதால் என்னுடைய உணர்வுகளை சொல்ல முடியாத மகிழ்ச்சியில் உள்ளேன். கருணாநிதி நினைவு நாணயத்தைவெளியிட்ட மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி. இது வரை நாம் கொண்டாடினோம். இன்று இந்தியாவே கருணாநிதி விழாவை கொண்டாடுகிறது.

பல அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட முதல் தேர்வாக இருந்தது ராஜ்நாத்சிங் தான். அவரை விழாவிற்கு அனுப்பி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. அனைத்து கட்சிகளுடன் நட்பு பாராட்டுபவராக ராஜ்நாத்சிங் பொருத்தமானவர் என்பதால் அவரை அழைக்க முடிவு செய்தேன்.தமிழகத்தில் நடப்பது ஒரு கட்சியின் அரசல்ல ஓர் இனத்தின் அரசு இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

வெளியிடப்பட்ட 100 ரூபாய் நாணயத்தில் கருணாநிதி புகைப்படமும் தமிழ் வெல்லும் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு நினைவு பரிசு வழங்கினார்.






      Dinamalar
      Follow us