ADDED : ஜூலை 30, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் ரயில் நிலையத்தில், திருச்சி மார்க்கத்தில் நேற்று காலை 7:00 மணிக்கு, 48 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் ரயில் பாதையொட்டி இறந்து கிடந்தார். விருத்தாசலம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர்.
அதில், இறந்தவர் சென்னை, போரூர், பிள்ளையார் கோவில் தெரு, லட்சுமி நகரைச் சேர்ந்த சசிகுமார், 48, என்பதும், கேரளாவில் விவசாய கூலி வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது.
சொந்த ஊர் செல்ல திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. அதன் படி, ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

