sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழந்தமிழக ஓவிய மரபை அறிய பயிலரங்கம்

/

பழந்தமிழக ஓவிய மரபை அறிய பயிலரங்கம்

பழந்தமிழக ஓவிய மரபை அறிய பயிலரங்கம்

பழந்தமிழக ஓவிய மரபை அறிய பயிலரங்கம்


ADDED : ஏப் 06, 2024 07:15 PM

Google News

ADDED : ஏப் 06, 2024 07:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் இயற்கை வண்ணங்களால், பழங்கால மனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. வரலாற்று காலத்துக்குப் பின், பானைக் கீறல்கள், கட்டடச் சுவர்களில் ஓவியங்களை வரைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சங்க இலக்கிய பதிவுகளும் அதிகம் உள்ளன.

பல்லவர், பாண்டியர் ஆட்சி காலங்களில், கோவில் சுவர்களில் மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஓவியங்கள் அதிகம் வரையப்பட்டு, சோழர் காலத்தில் அவை உச்ச வளர்ச்சி பெற்றன. அதன் தொடர்ச்சி சில காலம் விடுபட்ட நிலையில், நாயக்கர், விஜய நகர அரசர்களின் காலத்தில் மீண்டும் வளம் பெற்றது.

இந்த மரபை தஞ்சை, காஞ்சிபுரம், மதுரை கோவில்கள் உள்ளிட்டவற்றின் வாயிலாக, மரபு ஓவிய வளர்ச்சியை அறிய விரும்பும் ஆய்வு மாணவர்களுக்கு, ஓவிய மரபியல் வல்லுனர்கள் விளக்க உள்ளனர்.

இந்த பயிலரங்கம் வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்க உள்ளது. பங்கேற்க விரும்பும் ஆய்வு மாணவர்கள், https://forms.gle/bKUoNFqgPBJk6fiT9 என்ற இணைய இணைப்பின் வழியாக, வரும் 19ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us