பி.வி.எஸ்சி., படிப்புக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம்
பி.வி.எஸ்சி., படிப்புக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 27, 2024 01:51 AM
மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்களிடமிருந்து, மே 21ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணபிக்கும் அவகாசம் நேற்று முன்தினம் முடிவதாக இருந்தது. தற்போது, ஜூலை 1 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.awards.gov.in/Home/AwardLibrary என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அரசு பள்ளி பிளஸ் 1 மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு, அடுத்த மாதம் 21ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க, நேற்று மாலை அவகாசம் முடிவதாக இருந்தது. தற்போது, அவகாசம், வரும் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசு தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்களின் விபரங்களை, தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், ஜூலை 2ம் வாரத்தில் துவங்குகிறது. மாணவர் சேர்க்கைக்கு, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் அவகாசம், நேற்று மாலை முடிந்தது. ஜூலை இரண்டாவது வாரத்தில் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி கூறியுள்ளார்.
சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., - பி.டெக்., இளநிலை படிப்புகளுக்கு நாளை மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அயல்நாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் வாரிசுகள், நிதி ஆதரவு பெறுவோர், அயல்நாட்டிற்கான ஒதுக்கீட்டில் ஜூலை 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தில் தவறு இருந்தால் திருத்தங்களை, ஜூலை 2 முதல் 4 வரை மேற்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.