அரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்தி பிரச்னைகளை தீர்க்கலாம்
அரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்தி பிரச்னைகளை தீர்க்கலாம்
ADDED : பிப் 25, 2025 07:01 PM
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டங்கள் நடத்துவது இயல்பு தான். அந்த வகையில் தான், தங்களுடைய கோரிக்கைகளுக்காக தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டனர்.
அவர்களுக்கான கோரிக்கைகள் குறித்து, தமிழக அரசு ஜாக்டோ- ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.
'நாங்கள் நினைத்தால், நொடியில் மத்திய அரசுக்கு மாநில அரசு செலுத்தப்படும் வரியை நிறுத்தி விடுவோம்' என தி.மு.க., தரப்பில் சொல்கின்றனர். அப்படி செய்ய முடியுமா என தெரியவில்லை.
அ.தி.மு.,க.,வுக்கு கூட்டுத் தலைமையா, ஒற்றைத் தலைமையா என்பதை, அக்கட்சித் தலைவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோரின் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட்ட கட்சி, கூட்டுத் தலைமையின் கீழ் செயல்படுமா என்பது கேள்விக்குறிதான்.
கார்த்தி காங்., - எம்.பி.,

