ADDED : மார் 09, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி விமான நிலைய கழிப்பறையில் இருந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலைய கழிப்பறையில், நேற்று முன்தினம் இரவு துப்புரவு பணியாளர்கள் துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். அப்போது கழிப்பறையில் தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.
அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள், பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 1.560 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, 1 கோடி ரூபாய்.
கடத்தல் தங்கம் குறித்து, அதிகாரிகளின் விசாரணையில், நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து விமானத்தில் வந்த பயணி யாரோ தான், அந்த பையை கழிப்பறையில் மறைத்து வைத்து சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
அதிகாரிகள் மேலும் விசாரிக்கின்றனர்.

