10 லட்சம் பேருக்கு இலவச 'லேப்டாப்' வரும் 19 முதல் வினியோகம்
10 லட்சம் பேருக்கு இலவச 'லேப்டாப்' வரும் 19 முதல் வினியோகம்
ADDED : டிச 07, 2025 01:54 AM
சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி, இலவச 'லேப்டாப்' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், பிளஸ் 1 மாணவ - - மாணவியருக்கு, இலவசமாக லேப்டாப் வழங்கும் திட்டம், 2019ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில், 2025 நிதியாண்டு பட்ஜெட்டில், '20 லட்சம் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, அவரவர் விருப்பத்தின்படி, ஒவ்வொருவருக்கும் லேப்டாப் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக, 10 லட்சம் மாணவ -- மாணவியருக்கு லேப்டாப் வழங்கு வதற்கான டெண்டர், கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. அதில், 'டெல்' மற்றும் 'ஏசர்' நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், லேப்டாப் வழங்கும் திட்டத்தை, வரும் 19ல், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

