ADDED : அக் 04, 2011 09:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஆசிரியர்கள் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தத்தனேரி கிராமம் திரு.வி.க., மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் முகமது அல்டாப் (15). கடந்த செப்.24ம் தேதி அல்டாப், சில மாணவர்களுடன் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து அல்டாபின் பெற்றோரை அழைத்து ஆசிரியர்கள் புகார் செய்தனர். இந்நிலையில், கடந்த செப். 25ம் தேதி அல்டாப் தனது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். ஆபத்தான நிலையில் அவரை அருகிலிருந்தோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி, முகமது அல்டாப், நேற்றிரவு மரணடைந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

