சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!
சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!
ADDED : மே 17, 2025 10:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் சரக்கு லாரி மோதி 10 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் திருப்புவனம் பைபாஸ் ரோட்டில் மதுரை ஆண்டார் கொட்டாரத்தில் இருந்து பழையனூர் கிடாக்குழி நோக்கி அய்யனார் (40) என்பவருக்கு சொந்தமான 110 மாடுகள், ஜல்லி கட்டு கன்றுகள் சென்று கொண்டிருந்தன.
அப்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சரக்கு லாரி மோதியதில் தலா 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 மாடுகள் உயிரிழந்தது. மீதமுள்ள மாடுகள் அதிர்ச்சியில் பல திசைகளில் ஓடியதால் மாடு உரிமையாளர்கள் வருத்தம் அடைந்தார்.

