ADDED : ஜூலை 31, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் தொடர்ந்து, 10 தோல்விகளை சந்தித்தவர் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. அவர், தி.மு.க., ஆட்சியை பற்றி குறை கூறி வருகிறார். நாங்கள் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறோம். யாரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசை பற்றி குறை சொல்லவில்லை. வரும் 2026 சட்சபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறும்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் சேவைக்காக சாலைக்கு வருவதற்கு முன், அரசின் உரிய அனுமதி பெற வேண்டும். அதற்கு மாறாக, விளம்பரத்திற்காக போக்குவரத்து நெரிசல் நேரத்தில், சாலையில் வாகனத்தை நிறுத்தி, மரங்களுக்கு தண்ணீர் ஊற்றினால், நடவடிக்கை தான் எடுக்கப்படும். கூடவே, உரிய ஆவணமும் இல்லாததால், பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர், தி.மு.க.,