உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 02, 2026 01:28 AM
ADDED : அக் 02, 2026 01:26 AM
அ நிறம் | அளவு
ஜோலார்பேட்டை: திருப்பத்துார் மாவட்டம், கலால் பிரிவு மற்றும் போதை பொருள் தடுப்பு தனிப்படை போலீசார் இணைந்து, நேற்று காட்பாடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த பெங்களூரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று கேத்தாண்டப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே சோதனை நடத்தினர்.
அதில், பொது ஜன பெட்டியில், கழிப்பறை அருகே கேட்பாரற்ற நிலையில் இருந்த, 10 கிலோ கஞ்சாவை கண்டெடுத்தனர். இவற்றை கலால் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
