தமிழகத்தில் 10 கிமீ புறவழிச்சாலை, 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள்; லிஸ்ட் போட்டார் நிதின் கட்கரி
தமிழகத்தில் 10 கிமீ புறவழிச்சாலை, 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள்; லிஸ்ட் போட்டார் நிதின் கட்கரி
ADDED : டிச 20, 2024 08:48 AM

சென்னை: ராணிப்பேட்டையில் 10 கிமீ புறவழிச்சாலை, 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், ராணிப்பேட்டையில் இருந்து ஆந்திரப் பிரதேச எல்லை வரை 28 கி.மீ., தொலைவில் நெடுஞ்சாலை கட்ட அனுமதி வழங்கி உள்ளோம். இந்த திட்டத்திற்கு ரூ.1,338 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
4 வழி பிரதான பாதையில், இருபுறமும் நடைபாதைகள் இருக்கும். வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டையில் 10 கிமீ புறவழிச்சாலை, 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பெங்களூரு, திருப்பதி மற்றும் வேலூர் போன்ற நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தும். இது உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்கும்.
ராணிப்பேட்டையில், 2025ம் ஆண்டு நிறைவடையும் நிலையில், இந்தத் திட்டம் கணிசமான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும். அதே நேரத்தில் 2 வழிச் சாலைகள் உள்ளூர் போக்குவரத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.