ADDED : நவ 02, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள மின்சார விதிகள் தொடர்பாக முடிவு எடுக்க, 10 பேர் அடங்கிய குழுவை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைத்துள்ளது.
மின் நுகர்வோர், மின் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மின்சார வழங்கல் மற்றும் மின் பகிர்மான விதி களை, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விதிகளில் புதிய திருத்தங்கள் செய்வது, நுகர்வோரின் கருத்துக்கு ஏற்ப புதிய விதிகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளுக்காக, மின் பகிர்மான கழக இயக்குநர் தலைமையில், 10 பேர் அடங்கிய குழுவை, தற்போது ஒழுங்குமுறை ஆணையம் நியமித்து உ ள்ளது.
இதில், மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர்கள் உட்பட வீடு, வணிகம், தொழில், விவசாயம் ஆகிய துறைகளின் சார்பில், தலா ஒரு பிரதிநிதிகள் இடம்பெற்று உள்ளனர்.

