10 நினைவு அரங்கு, 36 சிலைகள் தி.மு.க., ஆட்சியில் திறப்பு
10 நினைவு அரங்கு, 36 சிலைகள் தி.மு.க., ஆட்சியில் திறப்பு
ADDED : அக் 19, 2024 12:21 AM
சென்னை:கடந்த மூன்றரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், நாட்டுக்காகவும், தமிழ் மொழி வளர்சிக்காகவும் பாடுபட்ட தலைவர்களுக்காக, 10 நினைவு அரங்குகள், 36 சிலைகள் திறக்கப்பட்டு உள்ளன.
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2022 ஆகஸ்ட் 15ல், சென்னை எழும்பூர்அருங்காட்சியகத்தில் காந்தி சிலை திறக்கப்பட்டது. பின், கருணாநிதி, அன்பழகன், நெடுஞ்செழியன், அம்பேத்கர் சிலைகள் திறக்கப்பட்டன.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கம், வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லம், பெருங்காமநல்லுார் தியாகிகள் நினைவு மண்டபம், அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபம், வீரமாமுனிவர் மணிமண்டபம், கருணாநிதி நினைவிடம், பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி.பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் மணி மண்டபங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டிய சகோதரர்கள், வ.உ.சி., சுப்பராயன் சிலைகள், கோவை வ.உ.சி., பூங்காவில் வ.உ.சி., மூவலுார் ராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி சிலைகள் திறக்கப்பட்டன.
மதுரையில் டி.எம்.சவுந்தரராஜன், சென்னையில் ரவீந்திரநாத் தாகூர், வி.பி.சிங், அப்துல் கலாம், கடலுாரில் அஞ்சலை அம்மாள், துாத்துக்குடியில் ராவ்பகதுார் குரூஸ் பர்னாந்தீஸ், நாமக்கல்லில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

