தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விவசாயி கொலை வழக்கில் 10 பேர் கைது

விவசாயி கொலை வழக்கில் 10 பேர் கைது

விவசாயி கொலை வழக்கில் 10 பேர் கைது


UPDATED : நவ 17, 2026 11:27 PM

ADDED : நவ 17, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 11:27 PM ADDED : நவ 17, 2026 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: திருச்சி, சோமரசம்பேட்டை அருகே, பைக்கில் சென்ற விவசாயியை வெட்டிக் கொலை செய்த கும்பலில், 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே, போதாவூரை சேர்ந்தவர் பாண்டியன், 46. விவசாயியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த இன்பராஜ், 22, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 15ம் தேதி இரவு, பாண்டியன், போதாவூரில் இருந்து, இனாம்புலியூரில் உள்ள தோட்டத்துக்கு பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது, இன்பராஜ், 10க்கும் மேற்பட்ட கூட்டாளிகளுடன் சேர்ந்து, பாண்டியனை வெட்டிக் கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த சோமராம்பேட்டை போலீசார், இன்பராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கருணேஷ், 18, செல்வேந்திரன், 21, பிரதீஷ், 23, மணிகண்டன், 21, கவுதம், 23, ஈஸ்வர், 20, வசந்தகுமார், 27, வினோத்குமார், 23, ஆகாஷ், 18, ஆகிய 10 பேரை, நேற்று, கைது செய்தனர்.

மேலும், இந்த கொலையில் சம்பந்தப்பட்ட இரண்டு சிறார்கள், இளஞ்சிறார் நீதிக்குழுமத்தின் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us