ADDED : ஆக 12, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வெறிநாய் கடித்து குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விருத்தாசலம் காந்தி நகர், அச்சுதம்மன் கோவில் தெரு, சாவடிகுப்பம், தில்லை நகர் பகுதிகளில் நேற்று வெறிநாய் ஒன்று, தெருவில் நடந்து சென்ற பொதுமக்களை துரத்தி, துரத்தி கடித்தது. இதில், 2ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் சாய் பிரணவ், பிரஜோன், கனிஷ்கா, 3; மற்றும் லட்சுமி, பராசக்தி, கண்ணன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இவர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வெறி நாயை, பொதுமக்கள் சிலர் அடித்து கொன்றனர்.
இச்சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.