உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 03, 2026 01:29 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில், நேற்று 10 இடங்களில் வெயில் சதமடித்தது.
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கம் மற்றும் வேலுாரில், தலா, 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, கரூரில் 103 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 39.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கம், மதுரை, நாமக்கல், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில், 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
