ADDED : அக் 24, 2024 01:44 AM
சென்னை:தீபாவளி பண்டிகை காலத்தில், கோ-ஆப்டெக்ஸ் துணிகளை, 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு, 'ஆன்லைன்' நிறுவனங்களுடன் கைகோர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கைத்தறித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோ - ஆப்டெக்ஸ் ஆன்லைன் விற்பனைக்கு தனி வலைதள பக்கம் இருந்தாலும், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் கைகோர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பொருட்களை திரும்ப பெற வேண்டும் என, சில நிபந்தனைகளை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விதிக்கின்றன.
கோ - ஆப்டெக்ஸ் பட்டு சேலைகள், 10,000 முதல் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புடையவை. அவற்றை ஆன்லைனில் வாங்கியவர்கள் பயன்படுத்தி விட்டு திரும்ப தர வாய்ப்புள்ளது.
எனவே, 1,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை மட்டும், முதற்கட்டமாக ஆன்லைன் நிறுவனங்கள் வாயிலாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
1,114 கைத்தறி சங்கங்கள் - 150 கோ - ஆப்டெக்ஸ் நிலையங்கள்
2023 - 24 விற்பனை ரூ.215 கோடி
தீபாவளி விற்பனை இலக்கு ரூ.100 கோடி
தனி வெப்சைட்: www.cooptex.gov.in
அதிக விலை உள்ளவை ஆன்லைனில் கிடைக்காது.