ADDED : பிப் 20, 2024 01:21 AM

செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை மற்றும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கோவில்களுக்கு கம்பி வட ஊர்தி வசதி, 26 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும். மேலும், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களின் திருப்பணிக்கு, இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஜவுளிப் பொருட்களின் தரத்தை உயர்த்தவும், தேவையான சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும், 20 கோடி ரூபாயில், கரூர், ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில், 10 சிறிய ஜவுளி பூங்காக்கள் நிறுவப்படும்
25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தொழில்நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழை துறைக்கென ஒரு சிறப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில் மேம்பாடு நிதி ஒதுக்கப்படும்
தொழில்நுட்ப ஜவுளி துறையில் முதலீடுகளுக்கு வழங்கப்படும் மானியத்தை, 15ல் இருந்து, 25 சதவீதமாக உயர்த்தி, 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். வரும், 10 ஆண்டுகளில், 500 கோடி ரூபாயில் நுாற்பு தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு, 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப் படும்
சென்னையில் கைவினை வளாகம்
சென்னையில், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி அரங்கம், புத்தாக்க மையம், திறந்தவெளி விற்பனை அரங்கம், வணிக வளாகம் என, புதிய ஒன்றிணைந்த வளாகம், 227 கோடி ரூபாயில் நிறுவப்படும்
மத்திய அரசின் புதிய கைவினைஞர் நலத்திட்டம், சமூக நீதிக் கோட்பாடுகளுக்கு எதிரானதாக உள்ளது. அதற்கு மாற்றாக, மேம்பட்ட கைவினைஞர் திட்டத்தை செயல்படுத்தி, ஆண்டுதோறும், 10,000 பேர் பயன் பெறும் வகையில், 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
இந்த ஆண்டு, 10,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில், 147 கோடி ரூபாயில்,3 லட்சம் சதுர அடி பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்படும்
காவல் துறை நவீனமய திட்டத்தின் கீழ், குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் முறையை மேம்படுத்த, அடுத்த ஐந்து ஆண்டுகளில், புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையை வலுப்படுத்தி நவீனமயமாக்க, 373 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்படும். நவீன தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு கருவிகள் கொள்முதல் செய்ய, 137 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில், உயர் பாதுகாப்புடைய புதிய சிறை கட்டப்படும்.

