ADDED : மார் 04, 2026 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
சில பகுதிகளில், அதிகாலையில் பனிமூட்டம் காணப்பட்டாலும், பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை நிலவரப்படி, வேலுாரில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 37.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, கரூர் பரமத்தி, சேலம் மாவட்டத்தில், 99 டிகிரி பாரன்ஹீட், அதாவது 37 டிகிரி செல்ஷியஸ் ஆக வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

